பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளில், H1N1 பரவியதைத் தொடர்ந்து, H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். கராச்சி காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகும்.
முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. பருவகால மாற்றங்கள் காரணமாக கராச்சி நகரில் மட்டும் தினமும் 40 முதல் 50 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த பாகிஸ்தானையே அதிர வைத்துள்ளது.
H3N2 வைரஸின் புதிய வேரியண்ட் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் வேக, வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 55 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்வம் காட்டும் மாணவர்கள்..!! பாக்.,-ல் சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க தொடங்கியாச்சு..!!
H3N2 வைரஸின் புதிய வேரியண்ட் தாக்கம் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம் காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டவர்களில் 8 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளடு. அமெரிக்காவில் இதுவரை 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸ் தாக்கத்தால் 1,200 பேர் உயிரிழந்தனர்.
தேசிய தரவுகளின்படி, கொலராடோ, நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் லூசியானா ஆகிய பகுதிகளில் வைரஸ் தாக்கம் கடுமையாக பரவி வருகிறது.
திடீரென காய்ச்சல் அதிகரிப்பது, கடுமையான உடல் வலி, மிகவும் சோர்வாக உணர்தல், வறட்டு இருமல், தலைவலி மற்றும் தொண்டை வலி. பசியின்மை மற்றும் வயிற்று வலி போன்றவை H3N2 வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
இதையும் படிங்க: பிச்சை எடுத்து அசிங்கப்படுத்துறீங்க... பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய ஐக்கிய அரபு அமீரகம்...!