இந்திய தேசம், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியினை அடுத்து முழு அளவிலான போரின் முதல் கட்டத்தில் நுழைந்துவிட்டது. இதன் போக்கை கவனித்தால் தேசம் தற்காப்பு யுத்தம் செய்தபடி பாகிஸ்தானுக்குள் புகுந்து அடிக்காமல் இந்திய எல்லையில் நின்றே அதனை பலவீனமாக்கும் தாக்குதலை செய்கின்றது, இது தற்காப்பு வகை தாக்குதலின் ஒரு வகை அன்றி இந்தியா படை எடுக்கவில்லை.

அதாவது எதிரியின் தாக்குதலை தடுத்து நம் எல்லையில் இன்று அடிக்கின்றோம், முழுக்க தற்காப்பு. இந்நிலையில் பாகிஸ்தான் பெரும் தோல்வியில் தடுமாறுகின்றது, அவர்களின் பிரதான விமானங்கள் இந்திய படையால் சுட்டு வீழ்த்தபடுகின்றன, அவர்கள் விமானிகள் பிடிபடுகின்றார்கள்.
போரில் வான் கட்டுப்பாடு முக்கியம், பாகிஸ்தானிய வான்படை வான் மேலாதிக்கம் பெற முயன்றது. அதை இந்தியா உடைத்துபோட்டு தன் ஆதிக்கத்தை நிறுத்துகின்றது. இதுதான் நிலம், கடலிலும் நடக்கின்றது. இப்படி தோல்வியினை முதலிலே உணரும் பாகிஸ்தான் இனி இந்தியாவினை வேறுவகையில் எதிர்கொள்ளும் அங்குதான் கவனம் அவசியம்.

இதையும் படிங்க: இது எங்கள் பூமி.. பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.. இலங்கை அரசு திட்டவட்டம்..!
அதாவது யுத்தம் ரீதியாக நம் ராணுவம் கவனித்து கொள்ளும். ஆனால் இந்தியாவுக்குள் பாகிஸ்தானின் உளவுதுறைகள் அது சார்ந்த நாட்டின் உளவுதுறைகள் பெரும் கலவரம் செய்ய முயலும். அது மனித நேயம், போரை நிறுத்து, அப்பாவி மக்கள், கொடிய இந்திய ராணுவம் என அவப்பெயரை உருவாக்கி, இந்தியாவுக்குள் பொய்செய்திகளாக வரும். பெரும் கவலரங்களை நிகழ்த்தப் பார்க்கும். இனி எல்லையில் வெல்லமுடியாது எனும் போது பாகிஸ்தான் இந்தியாவில் மறைந்திருக்கும் தன் மறைந்திருக்கும் சக்திகளை பத்திரிகை, ஊடகம், இன்னும் மனித நேயம் என பல வழிகளில் கையாண்டு பெரும் குழப்பம் செய்யும்.

இந்நேரம் பொறுமையும் நிதானமும் எல்லோர்க்கும் அவசியம், எல்லையில் நம் ராணுவம் எப்படி கவனமாக நாட்டை காக்குமோ அதே வலுவான கவனம் ஒவ்வொருவருக்கும் அவசியம். கட்சி, அரசியல், கொள்கை,மதம், சித்தாந்தம் தாண்டி நாட்டின் வெற்றிக்கும் நிலைதன்மைக்குமாக அதன் அமைதியான வளமான எதிர்காலத்துக்காக ஒவ்வொருவரும் பெரும் நிதானமும் கவனமும் கொண்டிருந்து நாட்டை காக்க வேண்டிய தருணமிது.

நாட்டை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு, இது நாட்டின் குடிமக்கள் தங்கள் பொறுப்பை உணரும் முக்கிய தருணம் என்பதால் மிகுந்த கவனமுடன் பொறுமையுடன் அதே நேரம் விழிப்புடன் இருப்பது நம் கடமை. ஒவ்வொரு குடிமகனும் ராணுவ சீருடை அணியா சிப்பாய் என்பதை அறிந்து பொறுப்புடன் இருந்து நாட்டை காப்போம், கடும் விழிப்பு எல்லா பக்கமும் அவசியம்.
இதையும் படிங்க: ஆரம்பித்து வைத்தது பாகிஸ்தான்... முடித்து வைத்தது இந்தியா- உமர் அப்துல்லா பெருமிதம்..!