காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி!! ஷேக் ஹசீனா மகளுக்கு சிக்கல்! ஆக்ஷனில் இறங்கிய WHO!
இந்த நிலையில் சென்னை ஐஐடி மெட்ராஸ் 62வது பட்டமளிப்பு விழாவில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். இந்திய ஆயுதப் படைகள் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இந்த தாக்குதல் 23 நிமிடங்களில் முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும், எந்த இலக்கையும் தவறவிடவில்லை என்றும் தோவல் கூறினார். இந்த தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிபடுத்தினார். "ஒரு கண்ணாடி கூட உடையவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்
இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் மாணவர்களிடம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான மோதலின் போது 55 பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறினார். இந்தியாவுடனான சமீபத்திய பதட்டங்கள் அணுசக்தி மோதலுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளை ஷெரீப் நிராகரித்தார். பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் தேசிய பாதுகாப்புக்காக நாடு அதன் அணுசக்தி திறனை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் 'FAKE ID' பிரச்சனை.. இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து! ஈரான் வார்னிங்!