சிந்து நதியில் தண்ணீரை திறந்து விடுமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலோனர் சுற்றுலாப் பயணிகள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்தது. 1960இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு உள்பட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்தது. இதன்படி சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையிலிருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மே 7 முதல் 11 வரை இரு நாடுகளின் எல்லையில் சண்டை ஏற்பட்டது. 12ம் தேதி இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டது. என்றாலும், சிந்து நதி நீரை திறந்து விடுவதில் மாற்றம் இல்லை என்று இந்தியா நிலைப்பாடு எடுத்தது.

மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இதை மனதில் வைத்துதான் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும் தண்ணீரும் ரத்தமும் ஒருசேர ஓட விட முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், சிந்து நதி நீரை திறந்து விடுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நீர் வளத்துறை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க: இனி யாரும் கிட்ட கூட வர முடியாது... பட்டையை கிளப்பிய பார்கவஸ்திரா ஆன்ட்டி ட்ரோன்!!

அந்தக் கடிதத்தில் தண்ணீர் நிறுத்தி வைத்திருப்பதால், நாட்டில் பல நெருக்கடிகள் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, தண்ணீரை திறந்து விடுமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு கொடுத்த வார்னிங்... அனைவருக்கு அனுப்பப்பட்ட திடீர் மெசேஜ்... என்னாவா இருக்கும்?