இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பாகிஸ்தான் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல இடங்களை குறித்து இந்தியா இன்று காலை தாக்குதல் நடத்தியது. மொத்தம் எட்டு இடங்களில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தி ராணுவ முகாம்களை குறி வைத்தது. அதில் மிகவும் முக்கியமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கக்கூடிய சர்கோதா விமான படைத்தளம்.

அதன் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இருப்பினும் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய ட்ரோன்களும் ஏவுகணைகளும் அவற்றை விடை மறிக்கவோ அல்லது தவிர்க்கவோ தவறிவிட்டன. அதனால் தாக்குதலை தடுக்க இயலாமல் போய்விட்டது. இதன் மூலம் பாகிஸ்தானுடைய ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை பார்க்க முடியும்.
இதையும் படிங்க: இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!

ஏற்கெனவே, லாகூரில் வான் பாதுகாப்பு தளத்தை செயலிழக்க செய்த நிலையில் தற்போது சர்கோதா விமானப்படை தளம் மீதும் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம்! எல்லையில் கூடுதல் படை... முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!