காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, ஏவுகணை சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து நேரடி மற்றும் மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய கொடி ஏந்திய எந்த கப்பல்கள் பாகிஸ்தான் துறை முகங்களுக்கு செல்லவும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: தயாராகும் அடுத்த ஆப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி ஏற்படுத்த இந்தியாவின் மாஸ் பிளான்.!
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வந்தால் என்ன நடக்கும்.? அல்லாவுக்குதான் தெரியும்.. ஃபரூக் அப்துல்லா ஆதங்கம்!