வந்தே மாதரம் பாடலை 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாக தெரிவித்தார்.
இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய பாடல் வந்தே மாதரம் என்று பெருமிதம் கூறினார். வந்தேமாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள் என்றும் தெரிவித்தார். தலைமுறைகளை கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல் என்றும் குறிப்பிட்டார். வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின் போது தற்செயலாக அமைந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

150 ஆண்டுகளுக்குப் பின் வந்தே மாதரம் பாடலின் புகழை மீண்டும் நிலை நிறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டு பேசினார். வந்தே மாதரம் பாடலால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்றும் இந்த விவாதத்தின் மூலம் எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்... தலைமைக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
நாடு அடிமைப்பட்டு இருந்தபோது இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடல் பெருமையை பறைசாற்ற நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்தே மாதரம் என்று கூறியவர்களை சிறையில் அடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். GOD SAVE THE QUEEN பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பியதாகவும் அதனை திணிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். பிரிட்டிஷானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆஹா...!! இவ்வளவு விஷயம் இருக்கா??... ரஷ்ய அதிபர் புதினுக்கு 6 பரிசுகளை அள்ளிக் கொடுத்த மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்...!