• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    போட்டுறா வெடியா...!! - மீனவர்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்த தவெக... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ஆணை ரத்து?

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்து ஆணை வெளியிட தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 10:00:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pattinampakkam new secretariat may be cancel

    சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட அனுமதியை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டத்திற்கு மீனவர் அமைப்புகள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    அரசாணையின்படி, சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் சதுர அடி அளவில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கட்டடக் கலை நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு உள்ளிட்ட தனித்தனி குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    ஏன் எதிர்ப்பு?

    பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் தங்களது சமூகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய இடம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    1958-ஆம் ஆண்டு இப்பகுதியில் வசித்த மீனவக் குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டபோது, அவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், பல ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது அதே பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால் தங்களது மீன்பிடித் தொழில் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,200 முதல் 1,300 குடும்பங்கள் பாதிக்கப்படலாம் என மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் போராட்டம்:

    திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளின் மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் அறிவித்துள்ளன.

    புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ள பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் மீனவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாக செப்டம்பர் 12-ஆம் தேதி பட்டினப்பாக்கம் லூப் ரோடு சந்திப்பு அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியது. திட்டத்தை தற்போதைய இடத்தில் செயல்படுத்தாமல் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.

    அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு: 

    இந்தத் திட்டத்திற்கு திமுக, பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிக் கட்சிகளும் திட்டத்தின் தற்போதைய இடத் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளன.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிட்டு, மீனவர்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அரசாணையை திரும்பப் பெறும் வரை மீனவர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    பாமக தரப்பிலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என்றும், சென்னைக்கு வெளியே நிர்வாக நகரம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் திட்டம் அமைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், தற்போதைய இடத்தில் எந்தப் பணியையும் தொடங்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்திற்கு எதிராக போராட்டமும் நடத்தியுள்ளது.

    நீதிமன்றத்திலும் வழக்கு: 

    இதனிடையே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    திமுக முன்னாள் எம்எல்ஏ வேலு தாக்கல் செய்த மனுவில், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்புதல்கள் தொடர்பான விவரங்கள் அரசாணையில் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

    மற்றொரு மனுவிலும், திட்டத்தால் பொதுமக்களுக்கும் மீனவர் சமூகத்தினருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசின் தரப்பில் என்ன நிலைப்பாடு?

    இதற்கிடையே, திட்டம் தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை நடைபெறுவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். 

    தற்போதைய நிலையில்,  பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்து ஆணை வெளியிட தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 29-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
     

    இதையும் படிங்க: பாரிமுனை கதர் வாரிய கொலு கண்காட்சியில் முதல்வர் விஜய் சிலை! அமைச்சர் விஜய் பாலாஜி தொடங்கி வைத்தார்!

    மேலும் படிங்க
    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    பிக்பாஸ் 10 வீட்டில் அடுத்த ஷாக்..!! நடிகை லட்சுமி ப்ரியா எலிமினேட்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

    சினிமா
    என்னடா!! இது

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    கெட்ட கொலஸ்ட்ராலுக்கு குட்பை சொல்லணுமா?? இந்த 5 உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க!!

    உடல்நலம்

    செய்திகள்

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    மாணவர்களே கவனிங்க..! தமிழகத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல..

    மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் அல்ல.. "விஜய்"..! ஒரு பைசா கூட குடுக்கல.. அமைச்சர் ஆனந்த் பேச்சு.!!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share