ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பொருளாதார அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமனேயி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் தனது புரட்சிகர காவல்படை மூலம் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. இந்தப் போரின் ஒரு முக்கிய அங்கமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறம்பட மூடியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்று. இங்கு உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி நடைபெறும். பெர்சியன் வளைகுடாவிலிருந்து உலக சந்தைக்கு செல்லும் பெரும்பாலான எண்ணெய் டேங்கர்கள் இந்த 21 மைல் அகலமுள்ள நீரிணையை கடக்க வேண்டியுள்ளது. ஈரான் இந்த நீரிணையின் வடக்கு கரையை ஆள்வதால், அதற்கு இங்கு கணிசமான கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில், பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்படுவதாக பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 2.09 முதல் 2.35 வரை அதிகரித்து பெட்ரோல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் எகிறிய பெட்ரோல் விலை..!! அப்போ இந்தியாவில்..?? கதிகலங்கி நிற்கும் மக்கள்..!!
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிவாயு கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரீமியம் பெட்ரோல் உயர்தர கார்கள் மற்றும் 200 சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஈரான் உடனான அமெரிக்கா - இஸ்ரேல் படைகளின் போர் நடிப்பதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. சாதாரண பெட்ரோலை விட கூடுதல் ரசாயன கலவைகள் கலக்கப்படும் பிரீமியம் பெட்ரோல் என்ஜின் செயல் திறனை அதிகரிக்கும். BPCL speed, HPCL power, IOCL XP95 இது போன்ற ப்ரீமியம் பெற்றோர்களை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது ஈரான் தாக்குதல்... ஸ்டன் ஆன கத்தார்... ஷாக்கான உலக நாடுகள்...!