டெல்லியில் நடந்த எம்.எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனைக் காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.
விவசாயிகள் நலனை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். விவசாயிகள் மீனவர்கள் பால் பண்ணையாளர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது எனவும் கூறினார்.
விவசாயிகள் நலனை ஒருபோதும் இந்தியா விட்டுக் கொடுக்காது என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்த அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.
அமெரிக்கா வேளாண் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய கேட்டதாகவும் அதனை இந்தியா நிராகரித்து விட்டதாகவும் கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயிகளின் நலனே முக்கியம் என்றும் ஒருபோதும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனை சந்தித்தது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது என்றும் அறிவியல் என்பது வெறும் கண்டுபிடிப்பு மட்டுமல்ல, அதை வழங்குவதும் தான் என அவர் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
இதையும் படிங்க: ஒரே புல்லட் தான்! உயிர் போயிடுச்சு.. என்கவுண்டர் சம்பவம் குறித்த அதிர வைக்கும் தகவல்கள்..!
இதை அவர் தனது பணி மூலம் நிரூபித்ததாகவும், இன்றும் கூட அவரது கருத்துக்கள் இந்தியாவில் விவசாயத்துறையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம் அவர் என்றும் பேராசிரியர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு மத்திய பாஜக அரசுக்கு கிடைத்ததில் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
முன்னதாக, வறட்சி மற்றும் புயல்கள் காரணமாக, விவசாயம் கணிசமான நெருக்கடிகளைச் சந்தித்ததாகவும், மேலும் கட்ச் பகுதியில் பாலைவனம் விரிவடைந்து கொண்டிருந்தது என்றும் கூறினார்.
தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, மண் சுகாதார அட்டைக்கான பணிகளைத் தொடங்கினோம்., அதில் பேராசிரியர் சுவாமிநாதன் மிகுந்த ஆர்வம் காட்டினார் என தெரிவித்தார்.
அவர் வெளிப்படையாக தங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் மற்றும் எங்களை வழிநடத்தினார் என்றும் அவரது பங்களிப்பின் காரணமாக, இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இல்ல கொலை நாடு! எல்லாத்துக்கும் காரணம் சரக்கு தான்.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு..!