நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாட்டப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மக்கள் மக்கள் சுதந்திரக் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் கருப்பொருள் - சுதந்திரத்தை மதிப்போம், எதிர்காலத்தை ஊக்குவிப்போம் என்பதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7:21 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சிறிது நேரத்திலேயே தேசியக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னதாக, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரால் மரியாதை செலுத்தப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றியதும் இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. மேலும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், என் அன்புக்குரிய இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர திருவிழா 140 கோடி மக்களின் தீர்மானங்களின் திருவிழா. இது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று 140 கோடி குடிமக்களும் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் மூழ்கியுள்ளனர். இன்று செங்கோட்டையில் இருந்து, நாட்டுக்கு வழிகாட்டி, நாட்டுக்கு திசை காட்டிய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு எனது மரியாதையான வணக்கத்தை செலுத்துகிறேன். இன்று டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் மாமனிதர். அரசியலமைப்பிற்காக தியாகம் செய்தவர். ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை 370-வது பிரிவின் சுவரை இடித்து உயிர்ப்பித்தபோது, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலி செலுத்தினோம்.
இதையும் படிங்க: 12வது முறையாக தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி... 79வது சுதந்திர தின விழாவில் மைல்கல் சாதனை....!
இன்றும், செங்கோட்டை தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, நாம் இயற்கை பேரிடர்கள், நிலச்சரிவுகள், மேக வெடிப்பு மற்றும் பல துயரங்களை எதிர்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் அனுதாபங்கள். மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் முழு பலத்துடன் செயல்பட்டு வருகின்றன.
இன்று செங்கோட்டையில் இருந்து, ஆபரேஷன் சிந்துரின் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வணக்கம் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த படுகொலையால் ஒட்டுமொத்த இந்தியாவும் கொதிப்படைந்தது, உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. ஆபரேஷன் சிந்துர் அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். 22-ம் தேதிக்குப் பிறகு, எங்கள் ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். அவர்களே வியூகம், இலக்கு மற்றும் நேரத்தை தீர்மானிக்கிறார்கள். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. எதிரி மண்ணில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம். பாகிஸ்தானில் ஏற்பட்ட அழிவு மிகவும் பெரியது.
பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளை வளர்ப்பவர்களையும் நாங்கள் இனி வேறுபடுத்திக் கருத மாட்டோம். அவர்கள் மனிதகுலத்தின் ஒரே எதிரிகள். இப்போது அணு ஆயுத அச்சுறுத்தல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்தில் எதிரிகள் தொடர்ந்து முயற்சித்தால், இராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட எந்த இலக்கையும் இராணுவத்தின் விதிமுறைகளின்படி செயல்படுத்துவோம் என்று எங்கள் இராணுவம் முடிவு செய்யும் என்றார்.
இதையும் படிங்க: இனி Tax டென்ஷன் இல்லை! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்! உங்களுக்கு என்ன லாபம்?