2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டங்கள், செயற்குழுக் கூட்டங்கள், மாநாடு, மக்கள் சந்திப்பு என தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றி வாய்ப்பு தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்று மக்களவை தேர்தல் நடைபெற்றால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் அதிமுக பாஜக கூட்டணிக்கு மூன்று தொகுதிகளில் வெற்றி கிடைக்க கூறும் என்றும் கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவைப் பொறுத்தவரை இன்று தேர்தல் நடந்தால் 324 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகம் கூட்டணி வெற்றி பெறும் என்றும் 208 தொகுதிகளில் மட்டுமே இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிரும் தேர்தல் களம்... விஜயகாந்துடன் விஜயை ஒப்பிட்டு பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை...!
MOOD OF THE NATION என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் தமிழகத்திற்கு கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டது. 2024 சட்டமன்றத் தேர்தலில் 12 சதவீதமாக இரண்டு பேர கட்சிகளின் வாக்கு வங்கி பிப்ரவரி மாதத்தில் ஏழாக சரிந்ததாகவும் தற்போது தமிழக வெற்றிக்கழகம் களம் இறங்கியுள்ள நிலையில் நாம் தமிழர் உன்னிடம் பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் உயர்வதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கான மகத்தான ஆட்சி திமுக! எவ்வளவு திட்டங்கள் வந்திருக்கு தெரியுமா? லிஸ்ட் போட்ட அமைச்சர்..!