தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலுக்கு மோர்தான் என பெயரிடப்பட்டு உள்ளது. இதனால் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… சும்மா பூந்து விளாச போகுது மழை… எச்சரிக்கை..!
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில, மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் அடுத்த 15 நாட்களுக்கு பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவை வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: சம்பவம் இருக்கு… "மோன்தா" சூறாவளி புயல் வருதாம்… இந்திய வானிலை மையம் அதி முக்கிய அறிவிப்பு…!