தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்கின்ற தகவலையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மிஸ் ஆகக் கூடாது... மக்கள் SAFETY தான் முக்கியம்... துறை சார்ந்த அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை...!
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்... நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... சுழட்டி அடிக்க போகுது...!