தென்மேற்கு வங்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு டிட்வா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த டிட்வா புயல் தென்மேற்கு வங்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நவம்பர் 30ம் தேதி அன்று அதிகாலைக்குள் வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கரையை வழியாக கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. புதுச்சேரியிலும் நாளை அதி கனமழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அவருக்கு அனுமதி குடுக்காதீங்க... விஜய் ரோடு ஷோ நடத்துவதை எதிர்த்து டிஜிபியிடம் மனு...!
புதுச்சேரிக்கு அதிக கன மழை கொடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதீத கன மழை கொட்டும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு பாடை... போராட்டத்தில் குதித்த புதுவை காங்கிரஸ் கட்சியினர்...!