தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாளம் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது.
த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்...!! இதுவரை யாருமே பார்க்காத காட்சி... புதுச்சேரி விஜய் பொதுக்கூட்டத்தில் டோட்டலாக மாறிய பிளான்...!
இன்று புதுவையில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துகிறார். இதன் காரணமாக பெண் ஒருவர் முடி காணிக்கை செலுத்தி உள்ளார். கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் தவெகவின் முதல் மக்கள் சந்திப்பு இன்று நடைபெறும் நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் முடி காணிக்கை செலுத்தி உள்ளார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட முடியை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ”மீண்டும் அசம்பாவிதம் நடந்தால்”... புதுச்சேரியில் விஜய் கால் பதிக்கும் முன்பே அண்ணாமலை அதிரடி எச்சரிக்கை...!