புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா வருகின்ற 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவரும் புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழா உரையை ஆற்ற உள்ளார். அவரது வருகைக்குப் பிறகுதான் இந்த விழாவுக்கான தேதியும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கான (2021, 2022, 2023 மற்றும் 2024) பட்டமளிப்பு விழா ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், இது பிரம்மாண்டமான நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த விழா நடைபெறும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் 2,500 இருக்கை வசதி கொண்ட சர்வதேச மாநாட்டு மையத்தையும், 100 அடி உயர தேசியக் கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 73,527 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட உள்ளது. இதில் 746 பேர் பி.எச்.டி. (Ph.D.) பட்டத்தைப் பெறுகிறார்கள். மேலும், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களில், 2021-ஆம் ஆண்டின் 191 பேர், 2022-ஆம் ஆண்டின் 191 பேர், 2023-ஆம் ஆண்டின் 192 பேர் மற்றும் 2024-ஆம் ஆண்டின் 186 பேர் உட்பட மொத்தம் 760 பேருக்குத் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்பட உள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காகப் பல்கலைக்கழக வளாகம் உச்சகட்டத் தயார்ப்படுத்தலில் உள்ளது.
இதையும் படிங்க: இரவே குவிந்த புதுவை வாரியர்ஸ்! தொண்டர்களுக்கு N. ஆனந்த் வேண்டுகோள்! நிர்வாகிகள் உற்சாகம்!
இதையும் படிங்க: தமிழகத்தில் 34 வகையான போலி மருந்துகள்! ஆய்வு செய்ய அவசர உத்தரவு! பீதியில் பொதுமக்கள்!