முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு, இந்திய அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாகும்.
பிரஜ்வல் ரேவண்ணா, ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சியைச் சேர்ந்தவர் மற்றும் கர்நாடக அரசியலில் செல்வாக்கு மிக்க தேவகவுடா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். 2023-ஆம் ஆண்டு, கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலுள்ள கே.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜ்வல் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புக
இந்த வழக்கு முதலில் உள்ளூர் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டபோது, அதன் முக்கியத்துவம் மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக, விசாரணை கர்நாடக மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது. சிஐடி குழு, விரிவான விசாரணை மேற்கொண்டு, 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ரத்தமே விஷம்! சிதைந்து போன தசைநார்கள்.. அஜித்துக்கு நடந்த துயரத்தை விளக்கிய வழக்கறிஞர்..!
ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற நிலையில், நாடு திரும்பி போது கைது செய்யப்பட்டார். 26 சாட்சிகளை விசாரித்த நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணா கண்ணீர் விட்டார். அவருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காசி பாண்டியன் ஒரு கூலிப்படை தலைவன்... மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வரும் கவின் தந்தை...