நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கேள்வி நேரத்தோடு இன்று தொடங்கியது. அப்போது மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை பேசவிடாமல் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டனர். சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு திரண்டு முழக்கமிட்டனர். பகல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர் கட்சி எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், பகல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தம்மால் தான் ஏற்பட்டதாக 24 முறை டிரம்ப் கூறியிருக்கிறார் அது தொடர்பாகவும், பகல்வாமில் 26 அப்பாவி பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து,

மாநிலங்களவையிலிருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். மேலும், நாடாளுமன்றத்தில் தான் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தாக்குதல் நடத்துனீங்க சரி! அந்த தீவிரவாதிகள் எங்க? மாநிலங்களவையில் கார்கே சரமாரி கேள்வி..!
கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் இதுபோல செய்வது சரியல்ல என்று பாஜக கூட்டணி எம்பிகள் குற்றம் சாட்டினார். இதழியல் எதிர்க்கட்சிகள் நாட்டைப் பற்றியது என்ற வரும்போது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என மதிய இணையமைத்த பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார். பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்களை அழிப்பதன் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நமது பாதுகாப்புப் படைகள் படி வாங்கியதாகவும் ஆபரேஷன் சிந்தூர் நமது தலைவர்களால் பாராட்டப்பட்டத, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களாலும் பாராட்டப்பட்டது எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளி.. சபாநாயகரை முற்றுகையிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!