நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
பகல் காம் தாக்குதல், ராணுவ தாக்குதல் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை தீர்க்கமாக பாதுகாத்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பகல் ஹாம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து வருவதாகவும், இது மன்மோகன் சிங் அரசு அல்ல பயங்கரவாதத்தை பார்த்து கொண்டு இருப்பதற்கு மோடி அரசு என்று தெரிவித்திருந்தார். மேலும் ஜவஹர்லால் நேரு குறித்தும் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் பின்னால ஒளிஞ்சிக்கவா உள்துறை அமைச்சர்? கௌரவ் கோகாய் சரமாரி கேள்வி..!
இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீரில் தீவிரவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பினார். காஷ்மீர் தீவிரவாதம் பயங்கரவாதம் ஒழிக்கப் பட்டதாக மத்திய அரசு கூறியதை நம்பியே மக்கள் சுற்றுலா சென்றதாக தெரிவித்தார்.

பகல் காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையில் தோல்வியையே காட்டுகிறது என்று கூறிய அவர், உள்துறை அமைச்சர் பொறுப்பேற்றாரா அல்லது உளவுத்துறை தோல்வியால் யாராவது ராஜினாமா செய்தார்களா என கேள்வி எழுப்பினார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பகல் காமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ஒப்புக்கொண்டார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், துணைநிலை ஆளுநர் பாதுகாப்பு குறைபாடு குறித்து தெரிவித்தது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.
தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏன் ஒரு வீரர் கூட பாதுகாப்பு பணியில் இல்லை ஈடுபடவில்லை என்றும் பைசரன் பள்ளத்தாக்குக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்வது அரசாங்கத்திற்கு தெரியாதா? ஏன் பாதுகாப்பு இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மோடி அரசு அடாவடி..! பீகாரில் 52 லட்சம் பேரின் வாக்குகள் பறிபோகிறது.. காங். எம்.பி ரன்தீப் சுர்ஜீவாலா குற்றச்சாட்டு..!