நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பகல்காம் தாக்குதல் தொடர்பாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய ராணுவ வீரர்கள் நாட்டின் இறையாண்மையை தீர்க்கமாக பாதுகாத்ததாக தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினர் என்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளை கொன்றதாகவும் தெரிவித்தார். இந்திய ராணுவ தளவாடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாய், சகோதரிகளின் குங்குமத்திற்காக நமது படைகள் பயங்கரவாதிகளை கொன்று பழிவாங்கியதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மோடி அரசு அடாவடி..! பீகாரில் 52 லட்சம் பேரின் வாக்குகள் பறிபோகிறது.. காங். எம்.பி ரன்தீப் சுர்ஜீவாலா குற்றச்சாட்டு..!
இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்களால் ஒன்பது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வெறும் 22 நிமிடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அடித்தொழிக்கப்பட்டதாக கூறிய அவர், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் பாலக்கோட் தாக்குதல் பாணியில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், இறுதியில், பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பேற்கிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பொறுப்பு ஏற்கிறாரா என கேட்டார். யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்றால், அது மத்திய உள்துறை அமைச்சர்தான் என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சரும் மத்திய அரசும் துணை நிலை ஆளுநரின் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்றும்அரசாங்கம் மிகவும் பலவீனமாகவும் கோழைத்தனமாகவும் இருப்பதால், மக்களை பைசரனுக்கு அவர்களின் அனுமதி அல்லது உரிமம் இல்லாமல் அழைத்துச் செல்வதற்கு டூர் ஆபரேட்டர்கள் பொறுப்பு என்று அது கூறியதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்தார், ஆனால் அவர் பஹல்காமிற்குச் செல்லவில்லை என்றும் அவர் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பீகாரில் ஒரு அரசியல் பேரணியில் உரையாற்றியதாகவும் குறிப்பிட்டார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான் பகல் காம் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதுக்காக அவசரம்? வாக்காளர் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க MP மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்..!