ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். தீவிரவாத இயக்கங்களின் தலைமை இடங்கள் தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 15 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் நடத்தி வருவதால் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போர்பதற்றம் நீடித்து வருவதால் பஞ்சாபில் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லையூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆறு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படிக்கச் சொன்ன அப்பா.. ஷாப்பிங் மாலில் +2 மாணவன் தற்கொலை.. பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..!

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தானிலும் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

பார்மர், பிகானர், ஜெய்சால்மர், ஸ்ரீ கங்கா நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையோர மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவல்துறை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்... வடகாட்டு பிரச்சனையில் பொங்கி எழுந்த திருமா!!