ஜார்க்கண்ட் மாநிலம் சைபாசாவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 2018-ஆம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராகுல் காந்தி, அமித் ஷாவைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, இந்த வழக்கு சுல்தான்பூர் மற்றும் லக்னோ நீதிமன்றங்களிலும் விசாரணையில் உள்ளது. இதற்கு முன்னர், சுல்தான்பூர் நீதிமன்றத்தில் 2024ம் ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி ஆஜராகி, தலா 25,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஜாமீன்களில் பிணை பெற்றார். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாக ராகுல் தொடர்ந்து கூறி வருகிறார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை எம்.பி-யிடம் செயின் பறிப்பு.. அமித்ஷாவுக்கு பறந்த கம்ப்ளைன்ட் லெட்டர்..!
ஜூன் 26ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜூன் 2ஆம் தேதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மனுத் தாக்கல் செய்தார். ஜூன் 10ஆம் தேதி ராகுல்காந்தி நீதிமன்றம் குறிப்பிட்ட நாளில் ஆஜராக முடியாது என்று காங்கிரஸ் எம்பியின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 6ஆம் தேதியை வழங்குமாறு கோரினார். ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை ஏற்றது.
இந்நிலையில் ஜார்க்கண்டின் சைபாசாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் நீதிமன்றம் கூறியது. ராஞ்சியில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து ராகுல் காந்தி வந்தடைந்த நீதிமன்றத்திலும், அதைச் சுற்றியும் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கு முன், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் 2023ம் ஆண்டு டிசம்பரில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதால், இது அரசியல் களத்தில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. ராகுலின் வழக்கறிஞர், இந்த வழக்கு அரசியல் பழிவாங்கல் என்று வாதிட்டார். இந்த விவகாரம், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் வழக்குகளின் பயன்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் ஆபரேஷன் மகாதேவ்.. குறிவைத்து வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்..!