ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள ஹர்வான் பகுதியில், டச்சிகாம் தேசிய பூங்காவை ஒட்டி, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் மகாதேவ்’னு ஒரு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையை தொடங்கியிருக்கு. இந்த ஆபரேஷனில், நேத்து மூணு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டாங்க.
இவங்க பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவங்களா அடையாளப்படுத்தப்பட்டிருக்காங்க. கொல்லப்பட்டவங்க பெயர் சுலைமான் ஷா (ஹாஷிம் மூசா என்றும் அழைக்கப்படுவார்), ஜிப்ரான், ஹம்சா ஆப்கானி. இதுல சுலைமான் ஷா, கடந்த ஏப்ரல் 22, 2025-ல் பஹல்காமில் 26 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்னு கூறப்படுது.
ஜிப்ரான், 2024 அக்டோபரில் சோனமார்க் டனல் தாக்குதலில் ஈடுபட்டவன்னு சொல்றாங்க.இந்த ஆபரேஷன், உளவுத்துறையோட தகவல்களையும், ஒரு சீன சாட்டிலைட் போனோட சிக்னலை வச்சும் தொடங்கப்பட்டது. ஜூலை 11-ல இருந்து இந்த பயங்கரவாதிகளோட நடமாட்டத்தை 14 நாளா கண்காணிச்சு, ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, CRPF ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை திட்டமிட்டு நிறைவேத்தினாங்க.
இதையும் படிங்க: எதுக்கு இவ்வளவு பயம்? ட்ரம்பை பார்த்தால் சுருங்கும் மோடி!! வறுக்கும் திரிணாமுல் காங்., எம்.பி!!
லிட்வாஸ் பகுதியில், நேத்து காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த என்கவுண்டரில், ராணுவத்தோட 24 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், 4 பாரா யூனிட், எலைட் பாரா கமாண்டோக்கள் இறங்கி, அடர் காட்டுப் பகுதியில் மூணு பயங்கரவாதிகளையும் கொன்னாங்க.
இப்போ, இரண்டாவது நாளா (ஜூலை 29) ஆபரேஷன் மகாதேவ் தொடருது. டச்சிகாம் தேசிய பூங்காவை ஒட்டிய அடர் வனப் பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம்னு உளவுத்துறை தகவல் கொடுத்திருக்கு. அதனால, ராணுவம் பல குழுக்களா பிரிஞ்சு, ட்ரோன் உதவியோட தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கு.
இந்தப் பகுதி, ஸபர்வான் மற்றும் மகாதேவ் மலைப்பகுதிகளுக்கு நடுவே இருக்குற கடினமான நிலப்பரப்பு, அதனால ஆபரேஷன் சவாலானதா இருக்கு.கொல்லப்பட்ட மூணு பயங்கரவாதிகளோட அடையாளத்தை உறுதி செய்ய, தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இறங்கியிருக்காங்க.

கைரேகை, கருவிழி, முக அடையாளப்படுத்தல் மூலமா இவங்களோட அடையாளத்தை உறுதி செய்யுற வேலையை துரிதப்படுத்தியிருக்காங்க. இவங்ககிட்ட இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், ஒரு அமெரிக்க M4 கார்பைன், இரண்டு AK-47 துப்பாக்கிகள், 17 ரைஃபிள் கையெறி குண்டுகள், செல்போன்கள் ஆகியவற்றை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியிருக்காங்க.
இந்த ஆயுதங்கள், பஹல்காம் தாக்குதலோட இணைப்பை உறுதி செய்ய உதவும்னு நம்புறாங்க.“இந்த மூணு பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பாவோ ட முக்கிய ஆட்களா இருக்காங்க. அடையாளப்படுத்தல் முடிஞ்சதும் முழு விவரங்களை வெளியிடுவோம்”னு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையோட இன்ஸ்பெக்டர் ஜெனரல் விதி குமார் பிர்டி சொல்லியிருக்கார்.
மத்திய உளவு அமைச்சர் அமித் ஷா, “பஹல்காமுக்கு நீதி கிடைச்சிருக்கு. இந்த ஆபரேஷன் ஒரு பெரிய வெற்றி”னு பாராளுமன்றத்தில் பெருமையா கூறினார். இந்த ஆபரேஷன், இந்தியாவோட பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லா பார்க்கப்படுது. விரைவில் இந்த ஆபரேஷனோட முழு விவரங்கள் வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.
இதையும் படிங்க: ட்ரம்ப் சொன்னது அத்தனையும் பொய்.. இந்தியா - பாக்., சண்டையில நடந்ததே வேற..!