காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: பாக். தாக்குதலால் உருக்குலைந்த குடும்பங்கள்.. காஷ்மீருக்கு சென்று ஆறுதல் கூறிய ராகுல்காந்தி!!

ஆபரஷேன் சிந்தூருக்கு பின் இரண்டாவது முறையாக காஷ்மீருக்கு ராகுல் காந்தி இன்று சென்றார். இதனால் காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பூஞ்ச் பகுதியில் பள்ளி மாணவர்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலால், இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் பலரும் அச்சமடைந்துள்ளனர். இனி எதற்கும் கவலைப்படாதீங்க.. நன்றாக படியுங்கள்.. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்.. என்று தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் 25 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!