தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெயிலின் வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலையில் (நாளை) 16ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் 17ஆம் தேதி 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூரில் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மக்களே குடை கொண்டு போங்க! 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...
மேலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் 18ஆம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?