மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 3-வது மொழியாக ஹிந்தி திணிக்கப்பட்டதற்கு சிவசேனை(யுபிடி) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாஜக கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், மக்கள் நலன் விரும்புபவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று இருவருமே பேசி வந்தனர்.

இந்நிலையில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5-ஆம் தேதி உத்தவ் தாக்கரேயும் ராஜ் தாக்கரேயும் ஒன்றாகப் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மகாராஷ்டிர அரசு பள்ளிகளில் ஹிந்தி 3-ம் மொழி என்ற உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதையொட்டி மும்பையில் இன்று தாக்கரே சகோதரர்கள் அறிவித்த பேரணி வெற்றி பேரணியாக மாறியுள்ளது. இருவரும் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் கைகோர்த்து கட்டியணைத்து தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மொழியால் ஒன்றான தாக்கரே சகோதரர்கள்... 2 தசாப்தங்களுக்கு பிறகு சாத்தியமான பிணைப்பு!

பின்னர் பேசிய மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர ராஜ் தாக்கரே, இந்தி வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? மகாராஷ்டிராவில் மராட்டியத்தில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை.

மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்குக் கீழ் அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி (அ) வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!