மகாராஷ்டிரா அரசு, 2025-2026 கல்வியாண்டு முதல் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயமாக்குவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது. இதன்படி, மாணவர்கள் மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பைத் தூண்டியது. இதனையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டனர்.
இவர்கள் இருவரும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பொது இலக்குக்காக இணைந்தனர், இது மகாராஷ்டிர அரசியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்பட்டது. உத்தவ் தாக்கரே, இந்தி திணிப்பு மராத்தி மொழி மற்றும் கலாச்சாரத்துக்கு அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் ராஜ் தாக்கரே இந்தி புத்தகங்களை எரிப்பது உள்ளிட்ட தீவிரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்தார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா அரசு இந்தி கட்டாய மொழி திட்டத்தை திரும்பப் பெற்றதால், தாக்கரே சகோதரர்களின் பேரணி ரத்து செய்யப்பட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மொழியால் ஒரே மேடையில் இணைந்தனர். இரு கட்சித் தொண்டர்களும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஒன்று சேர்ந்தனர். இந்த நிகழ்வு, இந்தி திணிப்புக்கு எதிரான மகாராஷ்டிராவின் உணர்வை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை ஒத்ததாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அலறும் மீனவர்கள்.. அடங்காத இலங்கை! தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க.. ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் ஒரே மேடையில் தோன்றியதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மும்பையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கட்சிக் கொடிகள் இன்றி இரு கட்சியின் தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!