இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலானது அமைதி உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் எல்லை பகுதியில் ஆங்காங்கே பாகிஸ்தான் மூலம் ட்ரோன் தாக்குதல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்களுடன் இந்திய அதிகாரிகள் அமைதி உடன்படிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து தற்போதைய நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனையில் முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படிங்க: பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்..!
இதையும் படிங்க: அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!