இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எல்லை பகுதியில் ஆங்காங்கே பாகிஸ்தான் மூலம் ட்ரோன் தாக்குதல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரபரப்பான சூழ்நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி குறித்தும், மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!

இதையும் படிங்க: #BREAKING:மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்! சம்பா பகுதியில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல்?