இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கே.எஸ்.ஆர். பெங்களூரு- சென்னை சென்ட்ரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 28- ஆம் தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு சென்னையை சென்றடையும் என்றும் சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அதே நாளில் பகல் 3.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

மேலும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கலபுரகி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 28-ந்தேதி இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும் என்றும் கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் 29ஆம் தேதி காலை 9.35 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, சகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு-கார்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், கார்வார்-மைசூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...