போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறினால் இந்தியா சரியான பதிலடி கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எச்சரிக்கை விடுத்தார். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் தனது பயங்கரவாத செயல்களை நிறுத்தும் வரை சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என அவர் திட்டவட்டமாக கூறினார்.

இந்தியா மிகைப்படுத்துவதாக கூறும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், இது முற்றிலும் தலைகீழானது என்றும் பகல் காமில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய சுற்றுலா பயணிகள் என்றும் பயங்கரவாதத்தின் மையப் பகுதி பாகிஸ்தானில் எல்லைக்கு அப்பால் உள்ளது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உலகில் பரவலான புரிதல் உள்ளது என்றும் இந்தியா தன்னை காத்துக் கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது என்பதை வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய சகாக்களுடன் நடத்திய உரையாடல்களின் போது எடுத்துரைக்கப்பட்டதாகவும் அவர்கள் அதனை அங்கீகரித்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

மேலும், ஏப்ரல் 25 ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட செய்திக்குறிப்பையும் குறிப்பிட்டு பேசிய அவர், இந்த பயங்கரவாத செயலுக்கு காரணமானவர்கள், அமைப்பாளர்கள் நிதி உதவி செய்பவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர்களை நீதி என்னும் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! சோபியன் பகுதியில் இந்திய வீரர்கள் அதிரடி..!