மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு 'பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா' எனச் சமஸ்கிருதப் பெயர் சூட்டுவதற்குத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பெயர் மாற்றம் மறைமுக இந்தித் திணிப்பு என்றும், புதிய திட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதையே மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம், தமிழகத்தில் இந்தித் திணிப்பை மறைமுகமாகச் செய்வதற்கான முயற்சி எனச் செல்வகணபதி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். புதிய சட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதையே மத்திய அரசு வழக்கமாக வைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் திட்டங்களுக்குச் சூட்டப்படும் பெயர்கள் தமிழக மக்களுக்குப் புரியவில்லை என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, "நான் தமிழில் பேசினால் உங்களுக்குப் புரியுமா? அப்படித்தான் இந்த மசோதாவும் (மசோதாவில் உள்ள இந்திப் பெயரைக் குறிப்பிட்டு) உள்ளது" என்று எதிர்க் கேள்வியெழுப்பினார். மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை மறுப்பதாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: உசுருக்கே ஆபத்து... என் மகளை காப்பாத்துங்கய்யா... தவிக்கும் தந்தை... ஆட்சியரிடம் மனு...!
தமிழக எம்.பி.க்கள் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை, மத்திய அரசின் திட்டப் பெயர்களில் இந்தியாவின் பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவை பற்றி பேச திமுகவினருக்கு தகுதி இல்லை - ஜெயக்குமார் அதிரடி