கன்னடம் பேச மறுத்த பெங்களூருவைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி அதிகாரி அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சூர்யா நகர் எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரிடம் வங்கி மேலாளர் கன்னடத்தில் பேச மறுக்கும் வீடியோ வைரலானது. அதில் "இது கர்நாடகா" என்று கூறும் வாடிக்கையாளரிடம், "நீங்கள் எனக்கு வேலை கொடுக்கவில்லை" என்று அந்த அதிகாரி பதிலளிக்கிறார். அந்த வாடிக்கையாளர் "இது கர்நாடகா" என்று திரும்பத் திரும்பச் சொல்லும்போது, "இது இந்தியா" என்று அதிகாரி பதில் சொல்கிறார். மேலும், "உங்களுக்காக கன்னடம் பேச மாட்டேன்" என்றும், "இந்திதான் பேசுவேன்" என்றும் அந்தப் பெண் அதிகாரி கூறுகிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், கர்நாடகாவில் வேலை செய்து வாழும் வெளி மாநிலத்தவர்கள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கன்னட ஆதரவு அமைப்புகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் யாரையும் ஒரு மொழியைப் பேச கட்டாயப்படுத்தக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் இப்போது கர்நாடகாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தப் பெண் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனேகல் தாலுகா, சூர்யா நகராவில் உள்ள எஸ்பிஐ கிளை மேலாளர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்தியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிகாரியைப் பணியிடமாற்றம் செய்ய எஸ்பிஐ எடுத்த விரைவான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக வன்மப் பேச்சு..! பாக்.,ல் ஹீரோவாகக் கொண்டாடப்படும் கர்நாடக CM..!

இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். அதேபோல உள்ளூர் மொழியில் பேசுவதற்கு வங்கி ஊழியர்கள் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் கன்னடத்தில் பேச முயற்சிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாச்சாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியை கட்டாயப்படுத்த மத்திய நிதி மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழியை மதிப்பது மக்களை மதிப்பதாகும்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: பேசாமல் கமலாலயத்துக்குள் அதிமுக ஆபிஸ் போட்டுக்குங்க..இபிஎஸ்ஸை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரகுபதி.!