நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றமோ, 3 மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, சீமானுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை, அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதனை கிழித்த விவகாரம், களேபரமாக மாறியது. இது ஒருபக்கம் இருக்கும்போது, ஆதரவாளர்கள் சூழ விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஆளாகினர் சீமான். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்த்தப் படுவதாகவும், விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சீமான் தரப்பு கோரியது. சமாரசமாக பேசி முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையும் படிங்க: எங்க கிட்டயேவா? மிரட்டியவரை அலேக்காக தூக்கி ஜெயிலில் போட்ட சீமான்.. தரமான சம்பவம்!!

இந்த நிலையில், சீமான் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அதில், சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் விதித்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 12 வாரங்களில் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையை நீடித்து உத்தரவு பிறப்பிககப் பட்டது. மேலும் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரர்களுக்கு அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: விரைவில் தலை துண்டிக்கப்படும்..! சீமானுக்கு பகிரங்க மிரட்டல்..! தெலுங்கர்களுக்கு எச்சரிக்கை..!