பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா நேற்று முன்தினம் திடீர் மரணம் அடைந்தார்.அவருக்கு வயது 42. ஆமதாபாத்தில் பிறந்த ஷெஃபாலி நடிகையாகும் ஆர்வத்தில் மும்பைக்கு வந்தார். 2002ல் காந்தா லாகா (Kaanta Laga) என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்து பெரும் புகழ்பெற்றார். 2004 ல் முஜ்சே ஷாதி கரோகி (Mujhse Shaadi Karogi) படத்தில் சல்மான்கான், அக் ஷய்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.கன்னடப்படம் ஒன்றிலும் நடித்தார்.
இந்தி சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காதால் டிவி பக்கம் தாவினார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று டிவி ரசிகர்களிடையே பிரபலமானார். 2019ல் இந்தி பிக் பாஸில் பங்கேற்று பரபரப்பை கிளப்பினார்.
மும்பை அந்தேரியில் ஷெஃபாலி வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.மயங்கி கிடந்த ஷெஃபாலியை கணவர் பராக் தியாகி அந்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்று அட்மிட் செய்தார்.
இதையும் படிங்க: குப்பையில் ஜெ. புகைப்படங்கள்... எங்க இதய தெய்வம் அவங்க! கொந்தளித்த அதிமுக!

அங்கு அவர் இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால், ஷெஃபாலி மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போதே இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷெஃபாலியின் திடீர் மறைவு திரையுலகம் ம ற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் சிலர் சந்தேகம் கிளப்பினர்.போலீசாா் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கணவர் பராக் தியாகி மற்றும் குடும்பத்தினர், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தினர்.
மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையான மரணம்தான் என தெரிய வந்ததாக, போலீசார் கூறினர்.இந்நிலையில், ஷெஃபாலி மரண பின்னணி பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷெஃபாலி அழகை பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். 42 வயதான ஷெஃபாலி எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆன்டி ஏஜிங் சிகிச்சையை எடுத்து வந்தார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவர் இந்த சிகிச்சையை எடுத்து வந்துள்ளார்.
சருமம் பொலிவுடன் இருப்பதற்காக விட்டமின் சி மருந்துகள் மற்றும் (Glutathione) குலுதாதயான் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார். அழகைக் கூட்டுவதற்காக பல ஆண்டாக எடுத்த ஆன்டி ஏஜிங் சிகிச்சையின் பக்க விளைவுகளால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சோதனை முடிவுகள் வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 2004 ல் இசையுலகில் ஜொலித்த காலக்கட்டத்தில் ஷெஃபாலி இசையமைப்பாளர் ஹர்மீத் சிங்கை காதலித்து மணந்தார். அதன்பிறகு இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2009ல் ஹர்மீத் சிங்கை விவாகரத்து செய்தார்.
2015 ல் டிவி நடிகர் பராக் தியாகியை 2வது திருமணம் செய்தார். மும்பையில் உள்ள ஓஷிவாரா மயானத்தில் ஷெஃபாலி உடல் தகனம் நடந்தது. கணவர் பராக் தியாகி இறுதிச்சடங்குகளை செய்தார். டிவி பிரபலங்கள் மற்றும் இசை துறையினர் ெஷஃபாலி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!