பீகாரில் தேசபக்தி ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு தம்பதியினர், ராணுவ நடவடிக்கையின் நினைவாக, தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'சிந்தூரி' என்று பெயரிட்டுள்ளனர்.
பஹல்காமில் ஏப்.22 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லபட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கி அது. இதனால் உலகம் முழுவதும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் பிரபலமாகியுள்ளது. இப்பெயரை
இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7இல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், பீஹாரைச் சேர்ந்த சந்தோஷ் மண்டல் மற்றும் ராக்கி குமாரி தம்பதிக்கு தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ஆபரேஷன் சிந்தூரின் பெயரில் உள்ள 'சிந்தூரி' என்று பெயரிட்டுள்ளனர். இக்குழந்தையின் உறவினர்க் குழந்தைக்கு சூட்டியிருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகக் கருதுவதாக கூறினர்.
ராணுவ நடவடிக்கைக்கு வைத்த பெயரை, தனது குழந்தைக்கு சூட்டி, தேசபக்தியை பீஹார் தம்பதி வெளிப்படுத்தி உள்ளது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் விமான நிலையம் மீது பாக். தாக்குதல்... எஸ்400-ஐ பயன்படுத்தி இந்திய ராணுவம் பதிலடி!!