இந்தியாவிலேயே பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலில் டிசம்பர் 27 ம் தேதி மண்டல பூஜையும், டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை விநியோகிப்பது முதல் தினமும் இருபதாயிரம் ஐயப்ப பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் செய்ய மையங்கள் அமைத்துக் கொடுத்தது வரை சபரிமலை வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களே..!! தரிசனத்திற்கு ரெடியா..!! தேவசம்போர்டு முக்கிய அறிவிப்பு..!!
அதே சமயம் இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...!