உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு இந்திய நீதித்துறையின் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும். இது உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யும் பொறுப்பை கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
கொலிஜியம் அமைப்பு, நீதித்துறையின் உயர்மட்ட நிர்வாகத்தை மேற்கொள்ளும் ஒரு கூட்டு முடிவெடுக்கும் குழுவாக செயல்படுகிறது. இது அரசியல் தலையீடுகளிலிருந்து நீதித்துறையைப் பாதுகாக்கவும், தகுதியான மற்றும் சுதந்திரமான நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான முறையாகும்.
கொலிஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவாக உள்ளது. தற்போது, இந்தக் குழு தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது. உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க, அந்தந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் கொலிஜியத்தில் உறுப்பினராக இணைக்கப்படுவார். இந்த அமைப்பு, நீதிபதிகளின் தகுதி, அனுபவம், நேர்மை, மற்றும் பிற தேவையான அளவுகோல்களை ஆராய்ந்து, நியமனங்களுக்கு பரிந்துரை செய்கிறது.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!
மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க: பார்த்து நடந்துக்கோங்க! நாய் பிடிப்பவர்களை தடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!