இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது.
ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புனையப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. திருத்தப் பணிகளின் போது அரசியல் கட்சிகளுக்கு முறையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், வாக்குச்சாவடி முகவர்களின் பங்களிப்பு முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடுத்த வழக்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அடிப்படை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன என்றும் பீகார் மாநிலத்தில் நவம்பர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்போது தீவிர சரி பார்ப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை என்பது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது வாக்களிக்கும் அடிப்படை விதிமுறைகள் உள்ளதாக மனுதாரர்கள் கூறியதற்கு தேர்தல் ஆணையம் பதில் என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். தேர்தல் இல்லாத நேரங்களில் இது போன்ற சரிபார்ப்பு பணிகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பூவை ஜெகன்மூர்த்தி MLA-க்கு முன்ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
இதையும் படிங்க: முன்ஜாமின் கோரி MLA ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு.. உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!