தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டம், ரயாலமடுகு கிராமத்தைச் சேர்ந்த புண்டிகூர் குமார் கவுட் (49) உத்தராகண்டில் இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றுகிறார். இவருக்கு, கொல்சாரம் மண்டலம், வரிகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த பத்மாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகள் சுமுகமாக இருந்த இவர்களது குடும்பத்தில் சண்டைகள் தொடங்கின. குமார் கவுட் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் குடும்ப பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தும் நடத்தினர். கடந்த மாதம் 11ஆம் தேதி குமார் கவுட் விடுப்பில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் தம்பதிகளிடையே சண்டை ஏற்பட்டது. அதனால் கணவன் மீது கோபம் கொண்ட மனைவி, இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால் குமார் கவுட் மட்டும் இராணுவக் காலனியில் தனது வீட்டிலேயே தங்கியிருந்தார்.
எனினும், மனைவி பத்மா, கணவன் மீது சந்தேகம் கொண்டு, அவருக்குத் தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். அந்த கேமராக்களில் உள்ள காட்சிகளைத் தனது மொபைல் போனில் பார்க்கும்படி அமைத்துக் கொண்டது கணவர் குமாருக்குத் தெரியாது. இந்தநிலையில் இந்த மாதம் 6ஆம் தேதி, குமார் இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்தார். அவர்களுடன் கணவர் இருந்த காட்சிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்த மனைவி பத்மா, தன் பெற்றோரையும் சகோதரனையும் அழைத்துக்கொண்டு, ஆத்திரமாக இராணுவக் காலனியில் உள்ள வீட்டிற்குச் சென்றார்.
இரண்டு பெண்களுடன் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்து இது என்ன முறை?" என்று கணவனை கேள்வி கேட்டனர். அதன்பிறகு வாக்குவாதம் முற்றியதில், மனைவி பத்மா, அவளுடைய பெற்றோர் ராமகிருஷ்ண கவுட் - எல்லம்மா, தம்பி சந்தோஷ் மற்றும் சிலர் சேர்ந்து, குமார் கவுட் மீது இரும்புக் கம்பிகள், கம்பு மற்றும் கற்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். அதில் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையும் படிங்க: செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!
ஆனால், கொலையை இயற்கை மரணமாகச் சித்தரிப்பதற்காகப் பத்மாவின் குடும்பத்தினர் மற்றொரு திட்டம் வகுத்து அடுத்த நாள், குமாரின் சகோதரர் ரவீந்தருக்கு போன் செய்த பத்மா உங்கள் அண்ணனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்று கூறினார். இந்த விஷயத்தைக் கேட்டதும், குமாரின் சகோதரர் ரவீந்தர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது குமாரின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் உண்மை தெரிய வந்ததால் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் கொடூரம்... கள்ள காதலால் கணவனுடன் வெடித்த சண்டை... பெற்ற தாயே 9 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்...!