திருப்பதி ஏழுமலையான் கோயில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்களை வழங்குவதற்கான நடைமுறையில் மாற்றம்
திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகாலையில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணம் பெருமாளின் அருளைப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை. அங்கப்பிரதட்சணம் முடிந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் சிறப்பு தரிசனம் போன்று விரைவிலேயே சுவாமியை தரிசனம் செய்யலாம் என்பதால் பக்தர்கள் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆர்வம் காட்டுவர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த நடைமுறையை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாக்...! திடீரென உடைந்த ஏரி... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2000 உயிர்கள்...!
டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். என்பதால் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்க பிரதட்சணம் செய்ய டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி சென்ற 5ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்... பெற்றோர்கள் கதறல்...!