பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை குறித்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக பதில் தாக்குதல் நடத்தி வரக்கூடிய நிலையில், இந்திய வான் நிலை உபகரணங்கள் மூலமாக துல்லியமாக அவர்கள் எதிர் தாக்குதலை தடுத்து வருகிறது

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் வான்வெளி தாக்குதல்கள் காரணமாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மாநிலங்களில் உஷார் நிலையில் இருக்கிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினுடைய செக்யூரிட்டி என்பது மேம்படுத்தப்பட்டுள்ளது. வரக்கூடிய பக்தர்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கக்கூடிய கெஸ்ட் ஹவுஸ் எனப்படக்கூடிய பயணிகள் அல்லது பக்தர்கள் தங்கும் இடங்களில் முழுமையான சோதனை என்பது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மோப்ப நாய்களைக் கொண்டும் பக்தர்களுடைய உடைமைகள் அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் தங்கக்கூடிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசத்துக்கு குறி... இந்திய முடிவால் அதிர்ச்சி..!

இதனிடையே, டி.எஸ்.பி.விஜய்சேகர் தலைமையில் ஆக்டோபஸ் கமாண்டோ, சிறப்பு அதிரடிப்படை, விஜிலென்ஸ் பணியாளர்களுடன் மாதிரி பயங்கரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை மேற்கொண்டனர். திருமலை ஜிஎம்சி டோல்கேட்டில் சோதனைகளை மேற்கொண்டும். திருமலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டும் விஜிலென்ஸ் கண்காணிப்புப் பணியாளர்கள் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பதற்றம்..! மக்களின் உள்கட்டமைப்பே குறி.. பாக். முகத்திரையை கிழித்த இந்தியா..!