திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா இந்தாண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஒன்பது நாட்கள் நீடிக்கும் பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதிக்கு வந்து தரிசனம் பெறுகின்றனர். ஆனால், பாதுகாப்பு கருதி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு அறிவித்துள்ளார்.

இந்த தடை, விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு முந்தைய நாட்களில் பலத்த கூட்டம் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் விதிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு செல்லும் இரு மலைப்பாதைகளிலும் (பழைய மற்றும் புதிய) இருசக்கர வாகனங்கள் மாலை 6 மணிக்குப் பிறகு இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
இதையும் படிங்க: இனி சுலபமா தரிசனம் செய்யலாம்.. திருப்பதியில் வந்தாச்சு AI கட்டுப்பாட்டு அறை..!!
விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணிவரை கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு தலைமையில் திருமலையில் உள்ள ராம்பகீசா போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தில் கருடசேவை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாராயுடு, கருட வாகன சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் வரும் 29ம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதை சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் திருப்பதியில் இருந்து திருமலை, திருமலையில் இருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் திருமலையில் நான்காயிரம் வாகனங்களுக்கு மட்டுமே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் திருப்பதி மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, தடைவிதிக்கப்படுகிறது. திருப்பதியில் ஐந்து இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து திருமலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவீன கேமராக்கள், டிரோன்கள் மூலமாக தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும். ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமாக பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
அதுமட்டுமின்றி கருட சேவைக்காக திருமலையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள நான்கு மாட வீதிகளில் கண்காணிப்பு மையங்களும், பாதை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களில் இருந்து பக்தர்கள் கருட சேவையை எளிதில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. போலி இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக திருமலையின் பெருமையை சீர்குலைக்கும் எந்த ஒரு தவறான தகவல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் முடிந்தவரை பொது போக்குவரத்து மூலம் திருமலைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதியில் கருட சேவை தினத்தன்று பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு இடங்களில் கியூஆர் கோடு மூலம் வாகன பார்கிங் இருக்கும் இடத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருட சேவைக்கு வரும் பக்தர்கள் போலீஸாருக்கும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும். கருட சேவைக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆயிரம் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதியில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

விழாவின் சிறப்பு, திருமலையை அழகாக அலங்கரிக்கும் பூக்களும், விளக்குகளும், பாரம்பரிய இசைக்கருவிகளும் பக்தர்களை மயக்குகின்றன. TTD-வினர் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட வசதிகளை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். இந்தத் தடை, விழாவின் சிறப்பைப் பாதிக்காமல், பக்தர்களின் பயணத்தை மிகவும் பாதுகாப்பானதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முடிந்தது சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு..!!