2025-ஆம் ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8, 2025 அன்று நிகழ்ந்தது. இந்த அற்புதமான வானியல் நிகழ்வு, பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைத்து, சந்திரன் செந்நிறமாக (Blood Moon) மாறுவதைக் காணலாம். இது பல தசாப்தங்களில் நீண்ட கிரகணங்களில் ஒன்றாகும்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நேற்று மாலை 3:30 மணி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. (செப்டம்பர் 7) நேற்று இரவு 9:50 மணி முதல் அதிகாலை 1:31 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணத்தால், பாரம்பரிய முறைப்படி கோவில் கதவுகள் மூடப்பட்டன.
இதையும் படிங்க: இன்று நிகழப்போகும் சந்திர கிரகணம்.. திருச்செந்தூர் முருகன் கோவில் நடை மூடல்..!! நேரம் இதுதான்..!!
கிரகணம் முடிந்த பின்னர், கோவில் வளாகம் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாத சேவை, புன்யாகவசம், தோமால சேவா, கொலுவு, பஞ்சாங்க சிராவணம் மற்றும் அர்ச்சனை சேவைகள் நடத்தப்பட்டன. கிரகண காலத்தில், கோவிலில் ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
மேலும், பக்தர்களுக்கு அன்னதான விநியோகமும் மாலை 3 மணி முதல் நிறுத்தப்பட்டது. இருப்பினும், திருமலை தேவஸ்தானம் 30,000 புளியோதரை பொட்டலங்களை பக்தர்களுக்கு விநியோகித்தது. இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், “சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் மூடப்பட்டு, பின்னர் மத சடங்குகளுடன் திறக்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் யாத்திரையைத் திட்டமிட்டு வருவது நல்லது,” என்றார். கோவில் தலைமை அர்ச்சகர்கள், துணை அதிகாரி லோகநாதன், அன்னப்பிரசாதத்துறை துணை அதிகாரி ராஜேந்திரா உள்ளிட்டோர் நடை மூடல் மற்றும் திறப்பு சடங்குகளில் பங்கேற்றனர். இந்த நிகழ்வால் பக்தர்கள் எவ்வித தடங்கலும் இன்றி தரிசனம் செய்ய முடிந்தது.
இதையும் படிங்க: இன்று நிகழப்போகும் சந்திர கிரகணம்.. திருச்செந்தூர் முருகன் கோவில் நடை மூடல்..!! நேரம் இதுதான்..!!