மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் குடியரசு தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதிலளித்து உற்றநீதிமன்றம் இன்று உத்தரவு வழங்குகிறது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர், ஆளுநர் மூன்று மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு குடியரசு தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்தில்14 கேள்விகளை எழுப்பி மனுத்தாக்கல் செய்துள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்.கடந்த ஏப்ரல் மாதம் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றமானது ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் அதிகபட்சமாக மூன்று மாதத்திற்குள் சட்ட மசோதாக்கள் மீடும் முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு... உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு...!
அதனை தொடர்ந்து ஒரு சில வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு குடியரசுத் தலைவர் மூலமாக ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதாவது 14 கேள்விகளை எழுப்பி ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். குடியரசுத் தலைவர் எழுதிய கடிதத்தையே வழக்காக மாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர்கள் மூலம் விரிவான வாதங்களை முன்வைத்தார்கள்.
குறிப்பாக மசோதாக்களை கால வரம்பில்லாமல் கிடப்பில் போட முடியாது. ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது என்கிற வாதங்கள் வந்து முன்வைக்கப்பட்டன. பல்வேறு மாநிலங்கள் குறிப்பாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களும்.இந்த வழக்கில் ஆஜராகி தங்களுடைய வாதங்களை வந்து முன்வைத்தன. தமிழ்நாடு அரசினுடைய வாதங்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இதையும் படிங்க: #BREAKING: திமுக தலையில் இடி… SIR பணிகளுக்கு தடையில்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!