நேற்று இரவு முதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.. அது மட்டுமல்லாது பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வான்வெளியிலேயே இந்திய ராணுவம் முறியடித்தது. இதனால் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகவும் நாளை மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் தொடங்கி போர் நினைவுச் சின்னம் வரை இந்திய வீரத்தின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக இந்த பேரணி நடத்தப்படும் என கூறியுள்ளார். தமிழக மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: குனிந்து கும்பிடு போட்டு ஆண்டவர் இபிஎஸ்.. அண்ணன் ஆட்சியை புகழ்ந்து தள்ளிய தங்கை..!

வீரத்துடன் போர் நடத்தி வரும் நமது இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 'வீரவேல் வெற்றிவேல்' ஆபரேஷன்.. 2026 தேர்தலுக்காக நயினாரின் அதிரடி அறிவிப்பு!