சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணி (PLFI) என்ற தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பின் முக்கிய தளபதியான மார்ட்டின் கெர்கெட்டா என்பவர், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்.. 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.. CRPF வீரர் வீரமரணம்..!
கும்லா மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மார்ட்டின் கெர்கெட்டாவின் தலைமையிலான மாவோயிஸ்டு குழு தாக்குதல் நடத்த முயன்றது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் மார்ட்டின் கெர்கெட்டா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் இருந்த மற்ற மாவோயிஸ்டுகள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

மார்ட்டின் கெர்கெட்டா மீது பல கொலை, கடத்தல் மற்றும் குண்டுவெடிப்பு வழக்குகள் பதிவாகியிருந்தன. இவர் PLFI அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், பல குற்றச் செயல்களைத் திட்டமிட்டவராகவும் இருந்தார். இவரது மரணம் மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் மாவோயிஸ்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறை மற்றும் மாநில அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு இது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: டென்னிஸ் வீராங்கனையின் உயிரை பறித்த ரீல்ஸ் மோகம்.. தந்தை செய்த கொடூர செயல்..!