அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூடுதல் 25 சதவீத வரிகள் ஆகஸ்ட் 27 புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இதன் மூலம், இந்தியப் பொருட்கள் மீதான மொத்த அமெரிக்க வரி 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சி வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தொழில்களைப் போலவே.. இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையும் இதற்குத் தயாராகி வருகிறது. டிரம்ப் வரி தாக்குதல் ரியல் எஸ்டேட் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் விதித்த வரி கட்டுமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க வழிவகுக்கும் என்றும், இதனால் டெவலப்பர்களுக்கு செலவு குறைவதால் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் டிரம்பின் வரி விதிப்பு இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவாக தோன்றினாலும், கூர்ந்து கவனித்தால் எதிர்காலத்தில் வீடு வாங்குவதற்கான செலவுகள் கணிசமான அளவு குறையக்கூடும் எனக்கூறப்படுகிறது. உலகளாவிய வர்த்தகம் தற்காலிகமாகத் தடைபட்டாலும், இந்தியாவின் வீட்டுச் சந்தை தடையின்றி தொடர வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்,
இதையும் படிங்க: மண்டை ஓட்டை வைத்து மாந்திரீக பூஜை... மரண பீதியில் உறைந்து கிடக்கும் மக்கள் - நடந்தது என்ன?
அதேபோல் வரி விதிப்பு நடவடிக்கையின் தாக்கத்தைக் குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. இது EMI-களை குறைக்க உதவுவதோடு, வீடு வாங்குவதற்கு கடன் பெறுவதையும் எளிதாக்கும். சமீபத்திய நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் RBI ரெப்போ விகிதத்தை 5.5 சதவீதமாகவே நீடிக்க முடிவெடுத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 100 அடிப்படை புள்ளிகள் குறைத்ததால், MPC விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்ததாக ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பணவீக்க அழுத்தங்கள் இன்னும் குறையவில்லை என்று வங்கி நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்திய எஸ்பிஐ அறிக்கையின்படி, வரவிருக்கும் அக்டோபர் 2025 கூட்டத்தில் ரிசர்வ் வங்கி விகிதங்களைக் குறைக்க வாய்ப்பில்லை. டிசம்பரில் விகிதக் குறைப்பு கடினமாக இருக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. ரம்பின் வரிகளின் உடனடி தாக்கம் இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு எதிர்மறையாகத் தோன்றலாம் என்றாலும், விநியோகச் சங்கிலிகளின் மறுசீரமைப்பு, அரசாங்க மானியங்கள், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் உள்நாட்டு தேவை போன்ற காரணிகள் எதிர்காலத்தில் நடுத்தர மக்கள் வீடு வாங்குவதை எளிதாக்கும் என்பதே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
இதையும் படிங்க: களைக்கட்டும் வேளாங்கண்ணி மாதா திருவிழா! கொடியேற்றத்தை காண லட்சக்கணக்கானோர் பாதயாத்திரை...