அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்திருக்காரு. நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகுற பொருட்களுக்கு 25% வரி விதிக்கப் போறேன்னு அறிவிச்சிருக்காரு. இதுக்கு காரணமா, இந்தியா ரஷ்யாவோடு கச்சா எண்ணெய், ஆயுதங்கள் பெருமளவு வாங்குறதை சுட்டிக்காட்டியிருக்காரு.
இதோட நிற்காம, “இந்திய பொருளாதாரம் இறந்து போச்சு”னு கடுமையா விமர்சிச்சு, தன்னோட எக்ஸ் பதிவுல, “இந்தியா-ரஷ்யா வர்த்தகம் பத்தி எனக்கு கவலை இல்லை. இந்தியா உலகத்துலயே அதிக வரி விதிக்குற நாடு. அமெரிக்காவோடு இந்தியாவுக்கு பெரிய வர்த்தகம் இல்லை. ரஷ்யாவோடயும் அமெரிக்காவுக்கு வர்த்தகம் இல்லை. இந்தியாவும் ரஷ்யாவும் தங்களோட இறந்து போன பொருளாதாரத்தை இன்னும் நாசமாக்கிக்கட்டும்”னு காட்டமா எழுதியிருக்காரு.
இந்த விமர்சனத்தை முன்வைச்சு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கிழிகிழினு கிழிச்சிருக்காரு. “டிரம்ப் சொல்றது சரிதான், இந்திய பொருளாதாரம் இறந்து போச்சுன்னு பிரதமர் மோடியும் நிதியமைச்சரும் தவிர மத்தவங்களுக்கு தெரியும். இது உலகமே புரிஞ்சுக்குது.
இதையும் படிங்க: இந்திய ஜிடிபி மீது இடியை இறக்கிய ட்ரம்ப்!! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அரசு விளக்கம்..!

டிரம்ப் ஒரு உண்மையை பேசினதுக்கு நான் மகிழ்ச்சி படுறேன். மோடி அதானி ஒருத்தருக்காக மட்டுமே வேலை செய்யுறாரு. அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிச்சு வச்சிருக்கு”னு கடுமையா விமர்சிச்சிருக்காரு.
மேலும், “நம்மகிட்ட சிறந்த வெளியுறவு கொள்கை இருக்குன்னு ஜெய்சங்கர் சொல்றாரு. ஆனா, ஒரு பக்கம் அமெரிக்கா நம்மை தாக்குறது, மறு பக்கம் சீனா நம்மை அச்சுறுத்துது. பாகிஸ்தானை எந்த நாடும் கண்டிக்கல. மோடி தன்னோட உரையில டிரம்பையோ, சீனாவையோ கூட பேசல. பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ தலைவர் செஞ்சிருக்காரு, ஆனா டிரம்ப் அவரோடு மதிய உணவு சாப்பிடுறாரு. நாம பெரிய வெற்றி பெற்றோம்னு பாஜக சொல்றது என்ன அர்த்தம்?”னு கேள்வி எழுப்பியிருக்காரு.
ராகுல் தொடர்ந்து, “டிரம்ப் 30-32 முறை இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதா சொல்றாரு, 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததா சொல்றாரு. இப்போ 25% வரி விதிக்குறேன்னு மிரட்டுறாரு. இதுக்கு மோடி ஏன் பதில் சொல்ல முடியல? உண்மையான காரணம் என்ன? அதிகாரம் யார் கையில இருக்கு? பாஜக நம்மோட பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கையை அழிச்சுடுச்சு”னு காட்டமா குற்றம்சாட்டியிருக்காரு.
இதையும் படிங்க: ட்ரம்ப் பொய் சொல்லுறதா மோடி சொல்லட்டும்!! மொத்த பிரச்னையும் முடிஞ்சிடும்.. செக் வைக்கும் ராகுல்!